தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது மனைவி மகன்களுடன் போய் வாக்களித்தார். அப்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகப் பாண்டியன், பிரபாகரன் ஆகியோருடன் இன்று காலை வாக்களித்தார் விஜயகாந்த்.
மகன் சண்முகப் பாண்டியன் வாக்களித்த பின்னர் அவர் போனார். அப்போது அவரது மனைவி வேகமாக வந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னார்.
அதைக் கவனமாக கேட்டுக் கொண்டார் விஜயகாந்த். ஆனால் வாக்கைப் பதிவு செய்யும் இடத்தில் ஒருவர்தான் இருக்க வேண்டும், ரெண்டுபேரு ஓட்டுப் போட முடியாதும்மா.. போம்மா அந்தப் பக்கம் என்று ஒரு பெண் தேர்தல் அதிகாரி சத்தமாக குரல் கொடுத்தார்.
இதைக் கேட்டு துணுக்குற்றார் பிரேமலதா. இருப்பினும் கண்டு கொள்ளவில்லை. தனது கணவருக்கு எதையோ திட்டவட்டமாக தெளிவாக கூறுவதிலேயே கவனமாக இருந்தார்.
அவருக்கு சரியாக புரிந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னரே அந்த இடத்தை விட்டு பிரேமலதா நகர்ந்தார். அதன் பின்னர் பொத்தானை அழுத்தி வாக்கைப் பதிவு செய்து விட்டு ஆள் காட்டி விரலை அந்த இடத்திலிருந்தபடியே உயர்த்திக் காட்டி நான் ஓட்டுப் போட்டு விட்டேன் என்று அனைவருக்கும் உணர்த்தினார் விஜயகாந்த்.
விஜயகாந்துக்கு பிரேமலதா என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை சின்னம் தெரியாமல் தப்பா ஓட்டுப் போட்டுடாதீங்கன்னு சொல்லியிருப்பாரோ…?
விஜயகாந்த் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்காளர். இங்கு பாஜக சார்பில் இல.கணேசன் போட்டியிடுகிறார். எனவே முரசு சின்னத்தை அவர் தேடிப் பார்த்திருக்கலாம், இதனால்தான் பிரேமலதா குறுக்கிட்டு தாமரைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment