இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.மும்பை கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட அதிகாரிகள் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியதில், என்கவுண்டர் போலி என நிரூபணமானது. மேலும் சம்பவத்தில் பாண்டே,சிங்கால் உள்ளிட்ட இரணடு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சிங்கால் ஒரு சிடி ஆதாரத்தை சிபிஐயிடம் வழங்கியுள்ளார். அந்த ஆடியோ சிடி 70 நிமிடம் பதியப்பட்டுள்ளது. அதில் மோடியின் தனி செயலாளரான ஜி.சி. முர்மு, ஏ கே சர்மா உள்ளிட்ட அமைச்சர்கள் எண்கவுண்டர் வழக்கு குறித்து பேசுவது அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் சிபிஐ மோடி மற்றும் அவர் தலைமையிலான அரசின் அமைச்சர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது.
2002 குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி ஈசான் ஜாப்ரியின் மனைவி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) அறிக்கை தாக்கல் செய்தது. இதை அகமதாபாத் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து கலவரத்தில் பலியான காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், ஜாகியா ஜாப்ரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘முதல் குற்றவாளி மோடிக்கு எதிராக, எஸ்.ஐ.டி நியாயமான விசாரணை நடத்தவில்லை என்றும், அதன் அறிக்கையை அகமதாபாத் நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டது. எதிர் தரப்பின் விவாதங்கள் பரிசீலிக்கப்படவில்லை. கலவரத்தில் தொடர்புடைய மோடி உட்பட 60 பேரை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்’’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரத் ஜஹான் உட்பட நான்குபேர் போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தப்பிக்க மோடி உட்பட குஜராத் அமைச்சர்கள் பேசிய புதிய சிடி சிபிஐ வசம் சிக்கியுள்ள நிலையில், இவ்வழக்கில் மோடி உட்பட குஜராத் அமைச்சர்கள் சிபிஐ வசம் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment