Latest News

அதிமுகவுக்கு 27; திமுகவுக்கு 10 இடங்கள்: பா.ஜ. கூட்டணி தேறாது என கருத்துக்கணிப்பு!


நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும், இரண்டாம் இடத்தை திமுக கைப்பற்றும் என்றும், தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கும் பா.ஜனதா கூட்டணி தேறாது என்றும் என்.டி.டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் அதிமுக 27 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், இது கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்றதை காட்டிலும் 18 இடங்கள் கூடுதல் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

மேலும் திமுக 10 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை கைப்பற்றும் என்றும், இது கடந்த தேர்தலில் பெற்றதைவிட 8 இடங்கள் குறைவு என்றும் அக்கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இந்நிலையில் மீதமுள்ள 2 இடங்கள் மட்டுமே பா.ஜனதா கூட்டணி உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு செல்லலாம் என்றும் அக்கருத்துக் கணிப்பு கூறுகிறது.

சதவீத அடிப்படையில் அதிமுகவுக்கு 45 சதவீதமும், திமுகவுக்கு 28 சதவீத வாக்குகளும், பா.ஜனதாவுக்கு 8, தேமுதிகவுக்கு 4, காங்கிரஸ் கட்சிக்கு 8 மற்றும் இதரகட்சிகளுக்கு 7 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அக்கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக என்.டி.டி.வி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.