கதாநாயகியாகும் ஆசையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர்
ஆன்லைனில் கதாநாயகிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து சென்னைக்கு வந்த நான்கு பெண்களை கும்பல் ஒன்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தகவல் சென்னை காவல்துறையினருக்குக் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து கூடுதல் ஆணையர் நல்லசிவம், துணை ஆணையர் ஜெயக்குமார், உதவி ஆணையர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான விபச்சார தடுப்பு காவல்துறையினர் மசாஜ் சென்டரில், அதிரடி சோதனை நடத்தி பெண்களை மீட்டனர்
இது தொடர்பாக, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திரிவேணி (40) என்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினர் மேலும் பலரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment