நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மதவாதம், முதலாளித்துவம் தலைதூக்க காரணமாகி விடுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் பேசிகையில், ‘வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வை ஆட்சியில் அமர்த்தினால், அது மதவாதம், முதலாளித்துவம் தலைதூக்க காரணமாகி விடும்.
பாஜக-வையும், காங்கிரசையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டுமென்றால் அவ்விரு கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணி அவசியம்.
குஜராத்தை முன்மாதிரி என்று மோடி சொல்லி வருகிறார். மோடியின் ஆட்சியில்தான் 2002 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர்.
மக்களுக்கு சாதகமான, மதச்சார்பற்ற கொள்கைகளை உருவாக்குவதற்கு ஏற்ற அரசை அமைப்பதற்கு, காங்கிரஸ், பாஜகவிற்கு எதிராக நாம் போராட வேண்டும். மதவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இடதுசாரிகள் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment