மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டுக்களில் இனிமேல் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதித் தரும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
பிரிஸ்கிரிப்ஷன் எனப்படும் மருந்துச் சீட்டுக்களில்தற்போது மருத்துவர்களின் கையெழுத்து சாதாரணமானவர்களுக்குப் பெரும்பாலும் புரிவதில்லை.
அதற்கு நோயாளிகள்,தங்களது இஷ்டத்திற்கு மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகவும், இதுபோன்ற பாதுகாப்புகாரணத்திற்காகவுமே இப்படி மருத்துவர்கள் எழுதுகிறார்கள் என்ற கருத்து உள்ளது.
அதேசமயம், சிலநேரங்களில் மருந்துக் கடைகளிலே கூட மருத்துவர்கள் எழுதித் தரும் சீட்டுகள் புரியாமல் போய் விடும் நிலையும் ஏற்படுகிறது. இதையடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் பெரிய எழுத்துக்களில் மருத்துவர்கள் எழுதித்தரும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்த வந்தன.
இதன்படி தற்போது ஒரு வரைவு நகலை மத்திய அரசுதயாரித்துள்ளது.அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்து விட்டது. தற்போது, இந்த அறிவிக்கை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சகம் அனுமதி அளித்தால், மருந்து சீட்டுகளை பெரிய எழுத்துகளில் எழுதும் சட்டம் நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும். ஆனால் இப்படி பெரிய பெரிய எழுத்துக்களில் உட்கார்ந்து நிதானமாக எழுதினால் நோயாளிகளை அதிக அளவில் பார்க்க முடியாது, தேவையில்லாத தாமதம் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment