பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர்ரஹீம்
அமீரக TIYAவின் நிர்வாகிகள்
அமீரக TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு
கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு தேரா பகுதியில் உள்ள சகோதரர் சேக்காதி
அவர்கள் இல்லத்தில் அமீரக TIYA
வின் தலைவர் மற்றும்
நிர்வாகிகள் முன்னிலையில் சகோதரர் S.M. அப்துல் முனாப் காக்கா அவர்களுடைய தலைமையில் மிக சிறப்பான முறையில் நடை
பெற்றது இதில் ஏராளமான நமது மஹல்லா சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதலாவதாக நமது TIYAவின் பைலாவை பொருலாளர் S.M. அப்துல்காதர் TIYAவின் பைலா முழுவதுமாக
வாசிக்கப்பட்டது
.
பைலாவின் படி உறுப்பினர்கள்
மாதந்தோறும் அமைப்பிற்கு சந்தாவை செலுத்த வேண்டும் தொடர்ந்து ஆறு மாத காலம் சந்தா
செலுத்தாத உறுப்பினர்களுக்கு, பொதுக்குழுவில்
கலந்து கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. தொடர்ந்து ஒரு
ஆண்டு சந்தா செலுத்தாத உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித
முன் அறிவிப்பு இன்றி நீக்கப்படும்.என்ற வாசகத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்வதென
தீர்மானிக்கப்பட்டது ஆறு மாதம் என்பதை ஒருவருடமாகவும். ஒரு வருடம் என்பதை ஒன்றை
வருடமாக மாற்றுவதென தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டு இப்தார் கொடுத்தது போன்று இனி வரும் காலங்களில்
இப்தார் நிகழ்ச்சியின் செலவினங்களை பொது வசூல்
செய்யாமல் TIYAவின் இருப்பு தொகையில் எடுத்து
செய்யவேண்டுமென்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது
நமது மஹல்லாவில் செயல் பட்டு
கொண்டிருந்த ( M.M.S.அபுல்ஹசன் நிணைவு ரஹ்மத் நூல் நிலையம் நலிவுற்று கிடக்கும் நூல்
நிலையத்தை நமது மஹல்லா இளைஞர்களின்
முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு அதை மீண்டும் தொடர்ந்து
செயல்படுத்திட M.M.S.குடும்பத்திலும் ஒரு தொகை
பெற்று பொது வசூல் செய்தும் அரசிடமிருந்து நமக்கு நமே திட்டத்தின்
கீழ் இன்னும் கொஞ்சம் விரிவு படுத்திஅதை தொடர்ந்து செயல்படுத்திட அமீரக TIYA முழு முயற்சியை செய்வதென
தீர்மானிக்கப்பட்டது.
அமீரகத்தில் உள்ள நமது
மஹல்லாவை சார்ந்த ஏழ்மையான சகோதரர்களுக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தை இந்த வருடம்
முதல் செயல் திட்டத்திற்கு கொண்டுவருவதென தீர்மானிக்கப்பட்டது.
நமது மஹல்லா சகோதரர்கள் வைத்த கோரிக்கையை
ஏற்று குர்ஆன் ஒதி கொடுக்கும் பள்ளியை இன்னும் இரண்டு இடங்களில் விரிவு படுத்துவது
என தீர்மானிக்கப்பட்டது.
மேலத்தெரு மஹல்லாவில் உள்ள ( பெண்கள் ) குளம் குத்தகை விடுவது சம்மந்தமாக அதிரை TIYA தலைவர் எழுதிய கடிதம் தொடர்பாக
விவாதிக்கப்பட்டது பெண்கள் குளம் குத்தகை விசையத்தில் தற்போது உள்ள சூல் நிலையில் TIYA குத்தகை எடுக்க சாத்தியம் இல்லை
என்பதாள் தாஜுல் இஸ்லாம் சங்கம்
தீர்மானத்தின் படியே விட்டுவிடுவதென பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது.
2013 மற்றும் 2014 ஆம்
ஆண்டு வரவு செலவு கணக்குகள் பொருளாலர் S.M. அப்துல் காதர் அவர்களால் சமர்பிக்கப்பட்டது.
மேலும் உறுப்பினர்கள்
முன்னிலையில் தேர்தல் குழு அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சகோதரர் A. சிராஜுதீன் அவர்கள்
முன்னிலையில் TIYA வின் கடந்த வருட நிர்வாகம்
கலைக்கப்பட்டது 2014ஆம் ஆண்டுக்கான TIYA வின் புதிய நிர்வாகிகளை தேர்வு
செய்து தருமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது
விசையமாக TIYA உறுப்பினர்களும் தேர்தல் குழு
அதிகாரியும் ஆலோசித்து தற்பொழுது உள்ள நிர்வாகமே மேலும் ஒராண்டுக்கு தொடர்ந்து
செயல் படவேண்டும் மென்று முடிவு செய்யபட்டு கூடுதலாக 5ந்து இணைசெயலாளர்கள் மற்றும்
புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி கீழ்க்காணும்
சகோதரர்கள் ஏகோபித்த ஆதரவு பெற்று ஒருமணதாக தேர்வு செய்தார்கள் அதன் விபரம்
வருமாறு.
தலைவர் : K.M.N. முகமது மாலிக்
துணைதலைவர் : H, சபீர் அகமது
செயலாளர் : N.K.M.நூர் முகமது (நூவன்னா)
இணைசெயலாளர்கள் : J. ஜவாஹீர், S. நிஜாமுதீன் , A. ரம்ஜான் அலி , S. ஹாஜி முகமது, M. சமீர் அகமது
பொருலாளர் : S.M. அப்துல் காதர்,
மேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் பொதுக்குழு
கூட்டம் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
என்றும் அன்புடன்,
அமீரக TIYA நிர்வாகம்
துபை
அமீரக TIYA நிர்வாகம்
துபை
No comments:
Post a Comment