ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தது போல பல ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளையும் முதல்வர் அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை ஜிம்கான கிளப் அருகில் இந்திய தேசிய லீக் கட்சியின் தடா அப்துல் ரஹீம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்க்கொண்டார்.
போலீசாரின் தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் 15 க்கும் மேற்ப்பட்டவர்கள் அவருடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்தில் சிறையில் உள்ளவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். கோவையிலிருந்து வந்த பல பெண்களும் கலந்துகொண்டு அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர். அங்கும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்க்கொண்டு வருகின்றனர்.
தங்களின் கோரிக்கைக்கு முதல்வர் அவர்கள் செவி சாய்க்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment