நேபாளத்தில் ஓட்டல் அறையில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த பீகார் மாநில நீதிபதிகள் 3 பேரை அந்த மாநில ஐகோர்ட் அதிரடியாக நீக்கியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாஜிஸ்திரேட் கோமல் ராம், அரா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஜிதேந்திர நாத் சிங், முசாபர்நகர் குடும்ப நல கோர்ட் முதன்மை நீதிபதி ஹரிநிவாஸ் குப்தர் ஆகிய 3 நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது ஓட்டல் அறையில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்தனர்.
நீதிபதிகள் தங்கியிருந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது இவர்கள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இது தொடர்பாக லோக்கல் பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து 3 நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இது குறித்து விசாரணை நடத்த புர்னியா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி விசாரணை நடத்தி 3 நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டு உண்மை என அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பின்னர் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் இறுதியாக பாட்னா ஐகோர்ட் உத்தரவின் பேரில் 7 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தியது. அழகிகளுடன் உல்லாசமாக இருந்த 3 நீதிபதிகளையும் பணி நீக்கம் செய்ய இந்தக்குழு பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை மீது பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ரேகா மனோகர் தோஷித் விசாரணை நடத்தி, 3 நீதிபதிகளையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். அவர்களுக்கான பென்ஷன் உள்பட ஓய்வூதிய பலன்களை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நேபாளத்தில் ஓட்டல் அறையில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த பீகார் மாநில நீதிபதிகள் 3 பேரை அந்த மாநில ஐகோர்ட் அதிரடியாக நீக்கியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாஜிஸ்திரேட் கோமல் ராம், அரா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஜிதேந்திர நாத் சிங், முசாபர்நகர் குடும்ப நல கோர்ட் முதன்மை நீதிபதி ஹரிநிவாஸ் குப்தர் ஆகிய 3 நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது ஓட்டல் அறையில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்தனர்.
நீதிபதிகள் தங்கியிருந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது இவர்கள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இது தொடர்பாக லோக்கல் பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து 3 நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இது குறித்து விசாரணை நடத்த புர்னியா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி விசாரணை நடத்தி 3 நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டு உண்மை என அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பின்னர் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் இறுதியாக பாட்னா ஐகோர்ட் உத்தரவின் பேரில் 7 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தியது. அழகிகளுடன் உல்லாசமாக இருந்த 3 நீதிபதிகளையும் பணி நீக்கம் செய்ய இந்தக்குழு பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை மீது பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ரேகா மனோகர் தோஷித் விசாரணை நடத்தி, 3 நீதிபதிகளையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். அவர்களுக்கான பென்ஷன் உள்பட ஓய்வூதிய பலன்களை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்
No comments:
Post a Comment