சவுதி அரேபிய இளவரசர் சாலமன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சல்மான் பின் அப்துலாஜிஸ் ஆகியோர் அடுத்தமாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது இந்தியா-சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சவுதி அரபியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிதம்பரம் இன்று ரியாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “இருநாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்தமாதம் கையெழுத்தாகும். இவ்வொப்பந்தத்தில் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் பரிமாற்றம் ராணுவ பயிற்சி மற்றும் கல்வி ஆகியவை இடம்பெறும்.
தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் நடைபெறும் குற்றங்களையும் போதை மருந்து நடவடிக்கைகளையும் இது கட்டுப்படுத்தும்” என்றும் தெரிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிதம்பரத்துடன் சவுதி அரேபிய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் தவ்பீக் அல் ரபையா உடன் இருந்தார்.
இந்தியா-சவுதி அரேபியா இடையேயான உறவு கடந்த வருடங்களில் இருந்து சிறப்பாக உள்ளது. கடந்த 2012ஆம் வருடம் ஏ.கே.அந்தோணி ரியாத் சென்றபோது, இளவரசர் கிரவுனுடன் வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment