கல்லணை கால்வாய் கோட்ட பொறுப்பில் இருக்கும் அலுவலர்களால் பட்டுக்கோட்டை வட்டார எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாசனத்திற்காகவும், வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கும் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன.
அதிரையில் வறண்டு காணப்படும் குளங்களுக்கு தண்ணீர் வந்தடைய வேண்டும் என்ற முயற்சிக்கு முதன்முதலில் வித்திட்டவர் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் ஆவார். இவரின் முயற்சி பாராட்டதக்கது - வரவேற்கத்தக்கது. இவரின் முயற்சியின் கீழ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிஎம்பி வாய்கால் எண் 20 வழியாக இதன் இணைப்பில் உள்ள அதிரை குளங்களுக்கு தண்ணீர் வந்தடைந்தது. இவ்வாறு வந்தடைந்த தண்ணீர் ஆங்காங்கே காணப்பட்ட கிளை வாய்க்கால் மூலம் உபரிகளாக பிரிந்து திசை மாறிச்சென்றதாலும் வறண்டு காணப்பட்டு வந்த செக்கடி, ஆலடிக்குளம் உள்ளிட்ட பிற குளங்களுக்கு எதிர்பார்த்திருந்த தண்ணீர் முழுவதும் வந்தடையவில்லை.
இதற்கிடையில் அரசால் முறை வைத்து வழங்கிய கெடு முடிவுற்றதால் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அதிரை பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
அதிரையில் வாழுகின்ற அனைத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வந்த அதிரை செடியன் குளம் மற்றும் நமதூர் பெண்கள் மாத்திரம் பயன்படுத்தி வந்த மரைக்கா குளம் ஆகியவற்றில் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையை கருத்தில் கொண்டு அதிரை பெரிய ஜும்மா பள்ளி, தாஜுல் இஸ்லாம் சங்கம், கீழத்தெரு சங்கம், பிலால் நகர் ஜமாத் ஆகியவற்றின் சார்பாக கடந்த [ 23-12-2013 ]அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்கள்.
அதே போல் ஆளும் கட்சியினரோடு நல்ல தொடர்பை வைத்துள்ள அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் அவர்களும் தனது முயற்சியாக சம்பந்தபட்ட துறை அலுவலர்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தார்.
இப்படி பல்வேறு தரப்பிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசிலித்த அரசு அலுவலர்கள் மீண்டும் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளனர். கோட்ட பொறியாளர் அவர்களிடமிருந்து நமதூருக்கு தண்ணீர் வர இருக்கிற தகவலை பெற்றதுடன் நேற்று இரவு அதிரை TIYA அமைப்பினர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை கண்டறிந்து சரிசெய்து வருகின்றனர். மேலும் வாய்க்காலைஒட்டிய தொன்னந்தோப்புகளுக்கு வண்டிப்பாதை செல்வதற்காக வாய்க்காலின் குறுக்கே தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதைகளை கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து தண்ணீர் சீராக வந்தடைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தற்காலிக பாதைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இன்று ஈடுபடு உள்ளதாக தெரிகிறது. அதிரையில் உள்ள அனைத்து குளங்களுக்கும் இன்று தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment