வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர் E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை அமைப்பை நடத்தி வருகிறார்.
ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும்.
அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள். (www.eltf.in ) இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள்.
கல்விக் கடன் கிடைக்காமல் கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். அவர்களே தேடிவந்து உதவிகள் செய்து தருகிறார்கள். கல்வி கற்க இனி என்ன கவலை !!
படியுங்கள். படித்தபின் ஷேர் செய்யுங்கள்…. யாரவது ஒரு மாணவருக்கோ / மாணவியருக்கோ இதன் மூலம் பயன் பெற்றால் அது போதும் ! காரணம் சென்ற 12ந்தேதி தினகரன் செய்திதாளில் வெளியான செய்தி.
கட்டணம் செலுத்த முடியாததால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தற்கொலை.
கிருஷ்ணகிரி, ஜன. 12:
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் நாமக்கல் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே சின்னேபள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஈஸ்வரன் (55). கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல் நிலவியது. இந்நிலையில், நாமக்கல் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரது மகள் ஐஸ்வர்யா (19) கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரனிடம், கல்லூரி கட்டணம்30 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், பொங்கல் முடிந்தவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட குடும்பத்தினர், அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து மகாராஜாகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment