இந்தி செய்தித்தாள் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே ,சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து அரசு பரீசிலனை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
விழாவில் அவர் மேலும் பேசுகையில், உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நான் இருந்த போது பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆத்திரமூட்டும் வகையில் உள்ள சில பழைய புகைப்படங்களை பார்த்தேன்.இது கலவரங்களை தூண்டும் வகையில் உள்ளது. எனவே உள்துறை அமைச்சகம் சமூக ஊடகங்களை கண்காணிக்கலாமா என்பது குறித்து யோசித்து வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment