Latest News

ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும்ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்


ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார் இந்திய மன்னர் ஜெய் சிங் மகாராஜர். ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மகாராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார்.

உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும்   தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார்.   மனமுடைந்த ஜெய் சிங் மகாராஜர், தன்   விடுதி அறைக்கு வந்து,   தன் வேலை ஆட்களை   காட்சியகத்திற்கு   அனுப்பி,   ஆழ்வார் நகரத்து   ராஜா உங்கள் வாகனத்தை   வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி  வரச்செய்தார்.

சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார். அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் பெரும் மரியாதையும் நடந்தது. அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள   ஆறு   கார்களையும்   மன்னர்   உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார்.

மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு   குறைய ஆரம்பித்தது.

ஐரோப்பா   மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது.   மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது.

உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும், குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பப்பட்டது.   அதுமட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பப்பட்டது.   ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக அவைகளை நிறுத்தி வேறு விசயத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.