கணவர் மற்றும் 3 மகன்கள் இறந்ததால் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து சிதம்பரத்தில் 58 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (58). இவரது கணவர் ராமகிருஷ்ணன் இறந்துவிட்டார். இவருக்கு சிந்து என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ரவிராஜன், சுரஷ்குமார், கோபாலகிருஷ்ணன் (34) என்ற மூன்று மகன்கள். ரவிராஜன் (28) 1995-ம் ஆண்டும், சுரேஷ்குமார் (18)-2007-ம் ஆண்டும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டனர். சமீபத்தில் கடைசி மகன் கோபாலகிருஷ்ணன் (34) கடந்த 7 மாதங்கள் முன்பு வாட்டர் சர்வீஸ் செய்யும் போது மின்சாரம் தாக்கி இறந்தார். கணவர் மற்றும் மூன்று மகன்களும் இறந்துவிட்டதால், மூதாட்சி ஜெயலட்சுமி தன்னம்பிக்கையை கைவிடாமல் தனது கடைசி மகனின் வாட்டர் சர்வீஸ் கடையை நடத்தி வருகிறார். தினமும் 6 முதல் 7 வாகனங்கள் குறைந்த விலைக்கு வாட்டர் சர்வீஸ் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
கணவர் மற்றும் மகன்களை இழந்து தனியாக தொழில் செய்து வரும் மூதாட்டிக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்புக்கு ஜெயலட்சுமியின் செல்போன் எண்: 99762 83075.
No comments:
Post a Comment