திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகம் சென்று நிர்வாகிகளை சந்தித்தார். முன்னதாக அலுவலகத்திற்கு வருகைதந்த ஸ்டாலினை ம.ம.க தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். திருச்சியில் நடைபெற இருக்கும் திமுகவின் 10 வது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கைபட எழுதிய அழைப்பினை ம.ம.க நிர்வாகிகளிடத்தில் கொடுத்து அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்
கேள்வி :ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டபேரவை கூட்டதில் மக்கள் பிரச்னையை எழுப்புவீர்களா?
பதில் :ஆளும் அ.தி.மு.க அரசு எங்களை பேச அனுமதித்தால்,எல்லா மக்கள் பிரச்னையையும் நாங்கள் பேச தயார்.
கேள்வி : வீரப்பன் கூட்டளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?
பதில் : அந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.
கேள்வி : மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களை சந்திக்க காரணம்?
பதில் : பிப்ரவரி 15 – 16 தேதிகளில், திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.கழகத்தின் 10 வது மாநில மாநாட்டை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களின் கைப்பட எழுதிய அழைப்பிதழை தலைவர் அவர்களின் சார்பில் எல்லா தலைவர்களுக்கும் வழங்கி வருகிறேன்,அதன் அடிப்படையிலான சந்திப்பு இது.
கேள்வி : மாநிலங்களவை தேர்தலில் திருச்சி சிவாவின் வெற்றிக்காக காங்கிரஸ் ஆதரவு கோருவீர்களா?
பதில் : வெற்றி வாய்ப்பை ஆராய்ந்த பிறகு தான் தலைவர் அவர்கள் வேட்பாளரை அறிவித்தார், அதனால் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக உள்ளது.
கேள்வி : தே.மு.தி.க கூட்டணி பற்றி மனிதநேய மக்கள் கட்சியிடம் பேசினீர்களா?
பதில் : ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சியும்,விடுதலை சிறுத்தைகளும் அவர்களிடம் பேசியுள்ளனர்.தலைவர் அவர்களும் அவர்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்பேன் என தெரிவித்துள்ளார்,எனவே எனது கருத்தும் அதுவே.
No comments:
Post a Comment