திமுக தலைவர் கருணாநிதி தேமுதிகவுக்கு கூட்டணி குறித்து பேசவருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தேமுதிகவுக்கு கூட்டணி குறித்து பேசவருமாறு அழைப்பு விடுத்தார். தேவைப்பட்டால் மாநிலங்களைவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ கூட்டணியில் சேர தேமுதிக முடிவு செய்துள்ளதாகவும், நாளை பா.ஜ கட்சியின் மேலிடப் பார்வையாளரான முரளிதரராவ் அக்கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் கருணாநிதியின் இந்த அழைப்பு அரசியல் வட்டாரங்களில் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது மாநிலங்களவை வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை எனவும் கூறினார். வீரப்பன் கூட்டாளிகளான சைமன், மாதேஸ்வரன், ஞானபிரகாசம் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment