சார்ஜாவில் திருட்டுத்தனமாக புகை பிடித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக 13வது மாடியில் இருந்து குதித்ததில் தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாகப் பலியாகியுள்ளான்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் பணி நிமித்தமாக அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 13 வயது மகன் ஒருவன் தனது தீய நண்பர்களின் சகவாசத்தால் சிறுவயதிலேயே புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான்.
மகனது புகைப் பிடிக்கும் பழக்கம் தந்தையின் கவனத்துக்கு வரவே அவர் அவனை அழைத்து எச்சரித்துள்ளார். மேலும், இனியொருமுறை அவன் புகைப் பிடிப்பதை தான் கண்டாலோ அல்லது கேள்வி பட்டாலோ அவ்வளவு தான்…’ என எச்சரித்தும் அனுப்பியுள்ளார்.
ஆனால், அச்சிறுவனால் புகைப் பிடிக்கும் பழக்கத்திலிஎஉந்து மீள முடியவில்லை. தொடர்ந்து தந்தைக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக புகைப் பிடித்து வந்துள்ளான். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல திருட்டுத்தனமாக 13வது மாடி பால்கனியில் நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறான் அச்சிறுவன்.
அப்போது எதிர்பாராத விதமாக பணிக்கு சென்றிருந்த அவனது தந்தை விரைவாக வீடு திரும்பியிருக்கிறார். மாடிப்படிகளில் ஏறி வரும் போதே மகன் புகைப் பிடித்துக் கொண்டிருப்பதை தந்தை பார்த்திருக்கிறார். தந்தை பார்த்து விட்டதை மகனும் கவனித்து விட, தந்தை மேலே வந்ததும் தனக்கு தண்டனை நிச்சயம் என உணர்ந்த அச்சிறுவன், பயத்ஹ்தில் மாடியில் இருந்து குதித்துள்ளான்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானான். இறந்த சிறுவனின் உடல் சார்ஜா போலீஸ் தடயவியல் ஆய்வகத்தில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment