ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியில் சிறந்து விளங்கினார் . எந்த அளவுக்கு என்றால் ஒரு ஆசிரியர் ,”இந்த விடைத்தாளை எழுதியவன் என்னை விட திறமைசாலி !”என தேர்வுத்தாளில் குறிக்கிற அளவுக்கு. சட்டக்கல்லூரியில் தங்க பதக்கம் பெற்றார் ராஜேந்திர பிரசாத்.
காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தன் வக்கீல் தொழிலை துறந்தார் . தரையை துடைப்பது ,கழிவறையை கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக முப்பத்தி எட்டு லட்சம் திரட்டினார்
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார் என எந்த பணியிலும் ஈடுபட கூடாது என அரசு விதித்த தடையை மீறி சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரண பணிகளில் ஈடுபட்டார் .காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு மகனை வெளியேற்றினார் .காங்கிரசின் தலைவராக போஸிற்கு பின் கிருபாளினிக்கு பின் பதவியேற்றார் .
சட்ட வரைவுக்குழுவின் தலைவர் ஆக இருந்தார் .இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார் ;பன்னிரெண்டு ஆண்டுகள் அவர் பதவி வகித்தது இன்றுவரை சாதனை . ஜனவரி இருபத்தைந்து அவரின் உடன் பிறந்த சகோதரி இறந்து போனார் ,ஆனாலும் அடுத்த நாள் குடியரசு தினத்தன்று முறைப்படி கொடியேற்றி விட்டு அதற்கு அடுத்த தினமே போய் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் அது தான் தேச ரத்னா ராஜேந்திர பிரசாத். அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment