Latest News

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா? இத ட்ரை பண்ணுங்களேன்


ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகிறது.

இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்படவாய்ப்புண்டு.

எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

தேன்: தொண்டை வலி

தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும்.

எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி

காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி

சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு

உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

 உப்பு: பாத வலி

நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள்.

முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும்.

அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி

மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

தக்காளி: கால் பிடிப்பு

இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி

மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.

இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை

வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

புதினா: தசைப்புண்

அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.