தனக்கு வயதாகி விட்டதாலும், உடம்பு சரியில்லை என்பதாலும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கும், தேமுதிகவுக்கும் கூட அவர் முழுக்குப் போட்டு விட்டார். பண்ருட்டியாரின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகுவது தொடர்பான தனது முடிவை சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு பண்ருட்டியார் அனுப்பி வைத்துள்ளார். அதில், உடல் நிலை சரியில்லாததாலும், வயதானதாலும் எனது எம்.எல்,ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தேமுதிக பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேபோல தீவிர அரசியலை விட்டு விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
சட்டசபைத தேமுதிக துணைத் தலைவராகவும், தேமுதிக அவைத் தலைவராகவும் இருந்து வந்தார் பண்ருட்டியார். பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். கடைசியாக ஆலந்தூர் தொகுதியிலிருந்து வென்றார்.
ராஜினாமா ஏற்பு
இதனிடையே பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment