மதுரை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக்குழுவில் உதவியாளர் உடன் தட்டச்சர் (அசிஸ்டெண்ட் கம் டைபிஸ்டு) பணியிடம் காலியாக உள்ளது.
மதுரையில் வசிக்கும் விருப்பமுள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தட்டச்சு தேர்ச்சி பெற்று, கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு படித்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 20ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இந்தத் தகவலை மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment