Latest News

டெல்லியின் முதல் இளம் முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்: 6 அமைச்சர்களும் பதவியேற்பு



டெல்லி: டெல்லியின் 7-வது முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றார். 45 வயதில் முதல்வரானதன் மூலம் டெல்லியின் முதல் இளம் முதல்வர் என்ற பெருமையை கெஜ்ரிவால் பெற்றுள்ளார். ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

அவரைத் தொடர்ந்து ராக்கி பிர்லா, மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சவுரப் பரத்வாஜ், கிரீஷ் சோனி, சத்யேந்திர ஜெயின் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 26 வயதான ராக்கி பிர்லாதான் இளம் அமைச்சர். முன்னதாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால், பதவியேற்பு விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு மெட்ரோ ரயிலில் வந்தார். அவரைப்போல அமைச்சர்களாக பதவியேற்பவர்களும் மெட்ரோ ரயிலில் தான் வந்தனர். பொதுமக்கள் முன்பு பதவியேற்பு விழா நடைபெற்றுவருவதை அடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1,600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ராம் லீலா மைதானம் பொது இடம் என்பதால், 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

கமாண்டோ போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், கலவரத் தடுப்பு காவல்துறையினர் உள்ளிட்டோரும் மைதானத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பதவியேற்பு மைதானத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மைதானத்திலேயே காவல்கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டு மைதானம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டது. பதவியேற்பு நிகழ்ச்சியில் 40,000 பேர் பங்கேற்றனர். பொது மக்கள் மாநில முதல்வர் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 1996ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஷாகிப் சிங் வர்மா மக்கள் முன்னிலையில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.