குஜராத் முதல்வரும், பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி சமீபமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மீது ஏற்கனவே குஜராத் இனப்படுகொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர் மீது இவரது ஆட்சியில் பணி புரிந்த மிக முக்கிய முன்னாள் அதிகாரிகள் அனைவரும் சமீபகாலமாக மோடி நிகழ்த்திய பல உண்மைகளை அவ்வப்போது கூறிவருகிறார்கள். இந்நிலையில் இவரது வலது கரமாக திகழ்ந்த அமைச்சர் அமீத் ஷா விடம் நரேந்திர மோடி இளம்பெண் ஒருவரை வேவு பார்க்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இது நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பெண்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக அமைப்புகளின் பெண் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்க அவரது மாளிகைக்கு இன்று வந்தனர். பின்னர் ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.
No comments:
Post a Comment