விமானத்தின் ஓடுபாதை (Runway) குறுக்கே நெடுக்கே எந்த ஓர் இடையூறும் இல்லாமல், சமச்சீராகதானே இருக்கும்? ஆனால், ஓடுபாதை குறுக்கே ரயில்பாதை செல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நியூஸிலாந்து நாட்டின் தெற்கு ஐஸ்லாந்தின் கிழக்குக் கடற்கரையின் அருகில் கிஸ்போர்னே(Gisborne) என்ற சிறிய விமான நிலையம் உள்ளது.
இங்கே ஓடுபாதையின் நடுவில் ரயில் தண்டவாளம் அமைந்திருக்கும்.
இந்த ரயில் பாதையில் காலை 6.30 முதல் இரவு 8.30 வரை ரயில்கள் இயங்குகின்றன. விமானம் அல்லது ரயில் எது முன்னதாக வருகிறதோ அதைப் பொறுத்து மற்றதை நிறுத்திவைப்பார்கள். இந்த விமானநிலையத்துக்கு தினமும் 60 உள்ளூர் விமானங்கள் வந்து செல்கின்றன.
<
No comments:
Post a Comment