தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில மாதங்களாகவே பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில், உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பில் இருக்கும் மூலப்பொருட்களை பட்டாசுகளாக மாற்றும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கும்பகோணம் அருகே உள்ள ஒழுகச்சேரியில் உள்ள ஒரு பட்டாசு தயாரிப்பு நிறுவனத்தில், ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தீப்பிடித்து நாலாபுறமும் சிதறியதால் ஊழியர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 8 பேர் பலியானதாகவும், 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உளள்து. மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment