ஒரு 20 வயது திருமணமாகாத இளம் பெண்ணின் நடமாட்டங்களையும் தொலைபேசிகளையும் மோடியின் கையாள், , போலி என்கவுண்டர் புகழ் அமித் ஷா குஜராத் உளவுத்துறையைப் பயன்படுத்தி வேவு பார்த்த விவகாரம் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.ஊடகங்கள் மாதுரி என புனைப்பெயர் சூட்டியுள்ள பெங்களூரைச் சேர்ந்த அந்தப் பெண் பொறியாளரை 2009-ம் ஆண்டில் காவல் துறையினரின் உதவியுடன் அமித் ஷா உளவு பார்த்துள்ளார்.
போலிஸ் மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.ஜிங்கால் தலைமையிலான போலீஸார் அந்தப் பெண்ணை, விமான நிலையம், ஹோட்டல், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்துள்ளனர். அந்தப் பெண் விமானத்தில் பயணம் செய்யும்போது கூட மாறு வேடத்தில் காவல்துறையினர் கூடவே பின் தொடர்ந்துள்ளனர்.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஜி.எஸ்,ஜிங்க்கால் தன் கைவசம் இருந்த தொலைபேசி பதிவுகளை சி.பி,ஐயிடம் ஒப்படைத்துள்ளார்.
கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த டேப்புகளில் இரண்டு விஷயங்களை கவனிக்க முடிகிறது.
முதலாவது விஷயம் அந்த பெண் தன் பாய் ஃப்ரெண்டை சந்திக்கிறாரா என்பது குறித்து அமித் ஷா திரும்பத் திரும்ப ஜிங்காலிடம் கேட்கிறார்.
இரண்டாவதாக இந்த உளவு பார்க்கும் பணியை அமித் ஷாவை விட சக்திவாய்ந்த ஒருவரின் உத்தரவின் பேரில் செய்வதாகவும் அவரை ‘ சாஹேப்’ என்றும் அமித் ஷா அழைக்கிறார்.
குஜராத் அரசாங்கத்தில் அமித் ஷாவிற்கு உத்தரவிடும் அளவு அதிகாரம் படைத்தவர் மோடி மட்டுமே.
பா.ஜ.க வழக்கம்போல இதெல்லாம் மோடிக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் என்று கீறல் விழுந்த ரெக்கார்டாக சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் உளவு பார்க்கபட்ட அந்த பெண்ணின் தந்தை ஒரு முக்கியமான உண்மையை சொல்லியிருக்கிறார். ’’முதல்வர் நரேந்திர மோடி எங்களின் குடும்ப நண்பர். எனவே, எனது மகளை கவனித்துக் கொள்ளும்படி அவரை கேட்டுக் கொண்டேன். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களையும் காப்பாறுவது ஒரு முதல்வரின் கடமை’’ என்று கதை விட்டிருக்கிறார்.
2005-ம் ஆண்டில் குஜராத்தின் பாவ்நகர் மாநகராட்சி விழாவில் முதல்வர் நரேந்திர மோடியும் அந்தப் பெண்ணும் சந்தித்ததாக கோப்ரா போஸ்ட் இணையதளம் கூறுகிறது.திரைக் கதையின் மீதியை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
உளவுதுறையையும் காவல்துறையையும் பயன்படுத்தி தனிப்பட்ட நோகங்களுக்காக ஒரு இளம் பெண்ணை ஒரு அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பில் உள்ளவர் வேவு பார்த்திருக்கும் விஷயம் ஒரு மேற்கத்திய சமூகத்தில் நடந்திருந்தால் இன்நேரம் பெரும் பிரச்சினை வெடித்திருக்கும். தனிநபர்களின் அந்தரங்க்கதின் மீதான மிகக் கொடூரமான தாக்குதல் இது.
அது சரி அந்த “சாஹேப்” பிற்கு அந்த ’’மாதுரி’’ மேல் அப்படி என்ன ஆர்வம்?
நன்றி – மனுஷ்யபுத்திரன் & அபுரயான்
source :
http://news.outlookindia.com/items.aspx?artid=817408#.UoY4VdAVEFA.facebook
http://blogs.outlookindia.com/default.aspx?ddm=10&pid=3081&eid=31
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment