Latest News

2014–ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014–ம் ஆண்டு வரும் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அரசு விடுமுறை நாட்கள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014–ம் ஆண்டு 21 நாட்கள் விடுமுறை நாட்களாக அரசு அறிவித்து உள்ளது. அரசு விடுமுறை நாட்கள் ஒரு சில ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருவதால் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. நடப்பாண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும்.

2014–ம் ஆண்டு ஜனவரி 14–ந்தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல், மிலாது நபி ஒரே நாளில் வருகிறது. இதுதவிர ஜனவரி 26–ந்தேதி குடியரசு தினம், ஏப்ரல் 13–ந்தேதி மகாவீர் ஜெயந்தி, ஆகஸ்டு 17–ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி, அக்டோபர் 5–ந்தேதி பக்ரீத் ஆகிய 4 பண்டிகை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. அதேபோல் அரசு ஊழியர்கள் வாரத்தின் இறுதியில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வருவதை விரும்புகின்றனர்.

ஜனவரியில் 5 நாட்கள் விடுமுறை

அந்தவகையில் 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2–ந்தேதி வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுதபூஜை, 3–ந்தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி, 4–ந்தேதி சனிக்கிழமை, 5–ந்தேதி பக்ரீத் ஆகிய முக்கிய நாட்கள் தொடர்ச்சியாக வருகின்றன. காந்தி ஜெயந்தியும், ஆயுத பூஜையும் ஒரே நாளில் வருவதுடன், பக்ரீத் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 2 அரசு விடுமுறைகள் குறைகின்றன.

அதிகபட்சமாக 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந்தேதி புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு, 14–ந்தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் மற்றும் மிலாது நபி, 15–ந்தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம், 16–ந்தேதி வியாழக்கிழமை உழவர் தினம், 26–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் ஆகிய 5 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக வருகின்றன. தொடர்ந்து ஏப்ரல் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் 3 அரசு விடுமுறை நாட்கள் வருகின்றன. 4 ஞாயிற்றுக்கிழமை, 2 திங்கட்கிழமை, 4 செவ்வாய்கிழமை, 3 புதன் கிழமை, 4 வியாழக்கிழமை, 4 வெள்ளிக்கிழமை உட்பட 21 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. சனிக்கிழமை எந்த அரசு விடுமுறையும் வரவில்லை.

21 நாட்கள் விடுமுறை

இதுகுறித்து தமிழகத்தில் 2014–ம் ஆண்டு 21 நாட்கள் அரசு விடுமுறை அளித்து, அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கு 2014–ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அரசு அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் கீழ் வரும் 21 நாட்கள் பொது விடுமுறை நாட்களில், மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொதுவிடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:–

பொது விடுமுறை நாள்  தேதி நாள்

ஆங்கில புத்தாண்டு  1–1.2014 புதன்கிழமை

பொங்கல் மற்றும் மிலாது நபி 14–1–2014 செவ்வாய்க்கிழமை

திருவள்ளுவர் தினம்  15–1–2014 புதன்கிழமை

உழவர் தினம்  16–1–2014 வியாழக்கிழமை

குடியரசு தினம்  26–1–2014 ஞாயிற்றுக்கிழமை

தெலுங்கு வருட பிறப்பு 31–3–2014 திங்கட்கிழமை

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு

(வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்) 1–4–2014 செவ்வாய்க்கிழமை

மகாவீர் ஜெயந்தி  13–4–2014 ஞாயிற்றுக்கிழமை

தமிழ்புத்தாண்டு மற்றும்

அம்பேத்கர்பிறந்த நாள் 14–4–2014 திங்கட்கிழமை

புனித வெள்ளி  18–4–2014 வெள்ளிக்கிழமை

மே தினம்  1–5–2014 வியாழக்கிழமை

ரம்ஜான்  29–7–2014 செவ்வாய்க்கிழமை

சுதந்திர தினம்  15–8–2014 வெள்ளிக்கிழமை

கிருஷ்ண ஜெயந்தி  17–8–2014 ஞாயிற்றுக்கிழமை

விநாயகர் சதுர்த்தி  29–8–2014 வெள்ளிக்கிழமை

காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுதபூஜை 2–10–2014 வியாழக்கிழமை

விஜயதசமி  3–10=2014 வெள்ளிக்கிழமை

பக்ரீத்  5–10–2014 ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி  22–10–2014 புதன்கிழமை

மொகரம்  4–11–2014 செவ்வாய்க்கிழமை

கிறிஸ்துமஸ்  25–12–2014 வியாழக்கிழமை

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி : http://indru.todayindia.info

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.