பண்டிகைகள் என்றாலே விழாக்கோலம் கலைகட்டும், அந்தந்த வழக்கப்படி பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படும் தினங்களில் தற்போது சாரயாக்கடைகளும் சாதனை படைத்து வருகின்றன. ஆம் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகமான விற்பனைகள் நடக்கும் என்பதை அறிந்து அனைத்து வகையான மது வகைகளும் ஸ்டாக் வைக்கப்பட்டன. தமிழக அரசு விற்பனையை கோடிகளில் இலக்காக வைத்தன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை மண்டலம் – 1,085, கோவை – 954, மதுரை – 1,752, சேலம் – 1,336, திருச்சி மண்டலம் – 1,711 என மொத்தமுள்ள 6,838 டாஸ்மாக் கடைகளிலும் அமோகமான விற்பனைகள் நடந்துள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 12 நாட்களுக்கு தேவையான மது வகைகள் கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டன. எதிர்பார்த்தது போலவே இலக்கைத் தாண்டி நேற்று முன்தினம் தீபாவளி அன்று மட்டும் 154 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளன.
“குடி” மகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணமாக இது கடந்த ஆண்டு விற்பனையை விட அதிகரித்து ரூ 154 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது டாஸ்மாக் கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி பண்டிகை நாட்கள் என்று முன்கூட்டியே சரக்கு இருப்பு முறையாக வைத்தால் அது இலக்கை தாண்டி விற்கப்படலாம் என்பதற்கு இது ஓர் உதாரணமாகி உள்ளதோடு தமிழகம் போதை மாநிலமாக மாறிவருகிறது என்பதையும் சுட்டிகாட்டுகிறது.
நன்றி : http://indru.todayindia.info/
No comments:
Post a Comment