ஞாயிற்றுக்கிழமையன்று ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானம் மெல்போர்னிலிருந்து டெல்லிக்குக் கிளம்பியது.
190 பயணிகள்
விமானத்தில் 190 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். விமானம் மெல்போர்ன் விமான நிலையத்தை விட்டு டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானத்தை மீண்டும் தரையிறக்கி
கண்ட்ரோலில் சிக்கல்...
பிளைட் கண்ட்ரோல் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தீவிர விசாரணை
இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் போய்ப் பஞ்சாயத்து பண்ண முடிவு
ட்ரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து சிக்கலைச் சந்தித்து வருவது குறித்து இந்த வார இறுதியில், வாஷிங்டனில் நடைபெறும் இந்திய - அமெரிக்க சிவில் விமானப்போக்குவரத்து மாநாட்டில் பிரச்சினை கிளப்பப்பபடவுள்ளதாம். அமைச்சர் அஜீத் சிங் இந்த விவகாரத்தை விவாதிக்க முடிவு செய்துள்ளார்.
போயிங்கை புரட்டியெடுக்க இந்தியா முடிவு
இந்த மாநாட்டில் போயிங் நிறுவனப் பிரதிநிதிகளும் வருகிறார்கள். ஏர் இந்தியா பிரதிநிதிகளும் வருகிறார்கள். மாநாட்டின்போது போயிங் நிறுவனத்திடம், அவர்களது தயாரிப்பான ட்ரீம்லைனர் கொடுத்து வரும் தொடர் பிரச்சினைகள் குறித்து சூடான கேள்விகளைக் கேட்க இந்தியா முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment