காங்கிரஸ் கட்சியை வேரறுப்போம் என்பதுதான் வைகோவின் பிரசார மையம். அத்துடன் அவர் காங்கிரஸுக்கு மாற்றாக பாரதிய ஜனதாவையே முன்வைத்தும் பேசிவருகிறார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் ஈழத் தமிழர்கள்
உணர்ச்சி தழும்பும் அறிக்கை
இதன் உச்சமாக பாரதிய ஜனதா அணியில் மதிமுக, தேமுதிகவை இணைத்தே தீருவேன் என்று சபமெடுத்து பேசிவந்தார் தமிழருவி மணியன். இந்நிலையில் மோடி பங்கேற்ற பாட்னா பொதுக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து நீண்ட அறிக்கை ஒன்றை உணர்ச்சி தழும்ப வெளியிட்டுள்ளார் வைகோ.
பாஜகவுக்கு ஷொட்டு
அதில் பாரதிய ஜனதா தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கையாண்ட விதம் பாராட்டத்தக்க பொறுப்புணர்ச்சி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மோடிக்கு பாராட்டு
மேலும் கடல்போல் கூட்டம் திரண்டிருந்தாலும் குண்டுவெடிப்பு பற்றியெல்லாம் பேசாமல் மோடி அப்பெரும் கூட்டத்தை கையாண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் வைகோ. பொதுவாக சட்டென எங்கோ நடைபெறும் சம்பவங்களுக்கெல்லாம் வைகோ அறிக்கை விட்டுவிடுவது இல்லை..
தமிழக பாஜகவைவிட...
தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கூட இத்தனை உணர்வுப்பூர்வமான ஒரு அறிக்கையை வெளியிடவில்லை. பாரதிய ஜனதாவின் பிரசார பீரங்கியாக தமிழகத்தில் களம் இறங்கப் போவது உறுதி என்கிற அறிவிப்பைதான் இன்றைய அறிக்கை மூலம் வைகோ வெளியிட்டுள்ளார்.
புதிது அல்ல..
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இணைவது ஒன்றும் புதிது அல்ல. 1998 லோக்சபா தேர்தலில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதிமுக வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய ஆதரவு அளித்தது.
2 அமைச்சர்கள்..
அத்துடன் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 4 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்ததுடன் 2 அமைச்சர்கள் பதவியையும் பெற்றது.
வைகோ கைது.. விலகல்
2003ஆம் ஆண்டு பொடா சட்டத்தில் தமிழக அரசால் வைகோ கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதுடன் இனிஒருபோதும் அந்த அணியில் இடம்பெறமாட்டோம் என்றும் அறிவித்திருந்தனர். அப்போது மதிமுக சார்பில் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்து வந்தனர்.
2004-ல் காங்கிரசுடன் கூட்டணி
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றது. 2007ம் ஆண்டு காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது.
2009-ல் அதிமுகவுடன்..
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்று ஒரு இடத்தில் வென்றது..
2013-ல் பாஜக அணியில்?
தற்போது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவோம் என்பதை பல பொதுக்கூட்டங்களில் மறைமுகமாக வைகோ தெரிவித்து வருகிறார். இந்நிலையில்தான் இன்று வைகோ, வெளிப்படையாக பாஜக தலைவர்களை பாராட்டியும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment