வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவின் நிலைமை முடிந்துவிடும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள் அனைத்து வகையிலும் நிறைவாக வாழ்கின்றனர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயரத் தேவையான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கையில் இது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக் கூட்டமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்வரின் சாதனைகள் குறித்து கேட்க வந்த மக்கள் கூட்டம் இது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
No comments:
Post a Comment