முல்லை பெரியாறு பிரச்சனையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி சாமி விக்ரங்கள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசியதாவது, சென்னை நூற்றாண்டு விழாவி்ல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது நட்பு ரீதியாக பேசி கொண்டோம். பத்மநாபபுரம் அரண்மனை பரம்பாரியம் மிக்க பழமையான அரண்மனை. அதன் பரம்பாரியம மாராமல் பராமரிக்க ரூ,.50 லட்சம் ஓதுக்கப்பட்டுள்ளது. உலக பரம்பாரிய சின்னத்தில் பத்மநாபபுரம் அரண்மனை இடம் பெற வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது.
கேரளாவில் யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற நினைவு சின்னங்கள் இல்லை. பத்மநாபபுரம் அரண்மனை மறறும வைநாடு இடத்தில் இடக்கல் குகை ஆகிய இரண்டையும் பரம்பாரிய சின்னமாக மாற்றும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. நெய்யாறு தண்ணீர் பிரச்சனையை பொறுத்தவரை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும். 2 மாநிலங்களுக்கும் நீண்ட கால உறவு உள்ளது. தமிழகத்தின் தண்ணீர் தேவை குறித்து கேரள அரசு நன்றா உணர்ந்து உள்ளது. முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஆனால் பாதுகாப்பு விசயத்தில் எந்த விட உடன்பாடும் செய்து கொள்ள மாட்டோம். இது கேரளாவின் 5 மாவட்ட மக்களி்ன் பிரச்சனை. மற்ற நதி நீர் பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம். இரண்டு மாநிலங்களின் உறவும் முன்பு போல தொடர வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment