Latest News

  

ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது. கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது. புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது. புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்றார். ஜப்பானில் இயங்கி வந்த கடைசி அணுமின் உலையும் நேற்று மாலையுடன் மூடப்பட்டதை அடுத்து கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது இதுவே முதல் முறையாகும். கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.