வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான விசா கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார். எனினும் மோடிக்கு விசா கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மாநில துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப், அமெரிக்காவின் நீண்ட கால விசா கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. மோடி மற்ற விண்ணப்பதாரர் போன்று விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவரது விண்ணப்பம் ஆய்வு செய்யப்படும் என மேலும், ஆய்வு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது நான் எதுவும் பேச போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் சம்பவத்தை காரணம் காட்டி அமெரிக்கா அரசு நரேந்திர மோடிக்கு விசா வழங்கிட மறுத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக பேசிய, சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் பெண் தலைவர் காத்ரினா லாண்டோசுவட், குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த சம்பவங்கள், இன்னும் சந்தகேத்திற்கிடமான வகையில் தான் உள்ளன. எனவே விசா கொள்கையில் மறு ஆய்வு செய்தால் தவிர அமெரிக்கா தனது முடிவில் உறுதியாக இருக்கும் எனவும் , மோசடிக்கு விசா கிடைப்பது சிக்கல் தான் என கூறியிருந்தார். தற்போது மோடி பிரதமர் வேட்பாளரக அறிவிக்கப்பட்ட பின்னரும் விசா கொள்கையில் மாற்றம் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment