அதிரை பேரூராட்சி உட்பட்ட 16 மற்றும் 17 ஆகிய வார்டுகளில் உள்ள திறந்த வெளியில் அமைந்திருக்கும் கழிவு நீர் வாய்க்கால்களில் அடைத்துக்கொண்டு இருக்கும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்களால் அப்புறப்பபடுத்தியவுடன் கழிவுகள் உலரும் வரை வாய்க்கால் அருகே குமித்து வைத்துவிட்டு திரும்ப அப்பகுதிக்கு வரும் போது அவற்றை குப்பை வண்டிகளில் அள்ளிச்செல்வது வழக்கமாக இருந்து வந்தது.
இதற்கிடையில் குமிந்து காணப்படும் கழிவுகளை அள்ளுவதற்கு இயலாமல் போய்விட்டாலோ அல்லது மறந்துவிட்டாலோ அவைகள் மீண்டும் அதே வாய்க்காலில் விழுந்துவிடும். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கு இரு வேலைகளாக அமைந்துவிடுவது மட்டுமல்லாமல் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கும் சூழல் அமைந்துவிடுகின்றன.
இவற்றை கருத்தில் கொண்டு TIYA அமைப்பினர் 16 மற்றும் 17 ஆகிய வார்டுகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 10,000/- மதிப்பீட்டில் கழிவுகளை அள்ளுவதற்கென்று பிரோத்தியமாக தயாரிக்கப்பட்ட இரு வாகனங்களை அதிரை பேரூராட்சிக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். இதன் பணி நேற்று முதல் ஆரம்பமாகியது. 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப் அவர்கள் உடனிருந்து கவனித்துவந்தார்.
No comments:
Post a Comment