மதுக்கூர் மெளலான தெருவைச் சார்ந்த நிஜாம் ராஜா அவர்களின் மகன் சேக் பரீத் [ வயது 15 ] பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நோன்பு பெருநாளுக்கு அடுத்தநாள் முதல் இச்சிறுவனுக்கு உடல் நிலை மிகுந்த பாதிப்புக்குள்ளானதையடுத்து மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்துள்ளனர். இதில் இச்சிறுவனின் உடலில் உள்ள இரண்டு கிட்னிகளும் மிகவும் பாதிப்படைந்திருப்பது கண்டறியப்பட்டன.
மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். உயிருக்கு போராடும் இச்சிறுவனுக்கு உதவும் விதமாக அவரின் தாயாரின் இரண்டு கிட்னிகளில் ஒன்றை தானமாக வழங்க முன்வந்துள்ளதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள மேற்கொண்ட பரிசோதனையில் இரண்டு கிட்னிகளில் ஒன்று நன்றாக உள்ளது என்றும், மற்றொன்று சிறிது பழுதடைந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு வருடம் காலம் மட்டுமே பயன்தரக்கூடிய பழுதடைந்த கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு செலவீனங்களாக ரூபாய் 2 லட்சம் என சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்களால் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால் சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சைக்குரிய அனைத்து செலவினங்களை ஏற்று நடத்த முடியாத சூழலில் இருக்கின்ற காரணத்தால் நம்மின் உதவியை அன்புடன் நாடியுள்ளனர்.
இந்த ஏழை சிறுவனுக்கு நாம் தாராளமாக உதவிகள் செய்வதன் மூலம், நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்துகொள்வோம் என்பதில் ஐயமில்லை [ இன்ஷா அல்லாஹ் ]
1. வங்கி கணக்கின் விவரங்கள் :
SB A/C Name : RAFEEK AHAMED
CANARA BANK
ADIRAMPATTINAM BRANCH
A/C No. 1201101037706
2. மேலும் நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது மஹல்லா சங்கங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
குறிப்பு : வழக்கறிஞர் A. அப்துல் முனாப் மற்றும் சேக்கனா M. நிஜாம் ஆகியோரால் சிறுவனின் சிகிச்சைகுரிய விவரங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர், இவர்களின் பரிந்துரையின் பேரில் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment