டெல்லி: வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக தூக்கத்தில் கனவு கண்ட இளைஞர் ஒருவர் அவசரத்தில் தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஆபத்தான நிலையில் இப்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று குழந்தைகள் வயிற்றுக்குள் பசியால் துடிப்பதாக கனவு கண்டதால் அவற்றின் பசியை போக்க வயிற்றை கத்தியால் கீறி குடலை உறுவிப் போட்டு தேடியுள்ளார். குழந்தைகளை காணாமல் கடைசியில் ரத்தமும், குடலும்தான் கொட்டியது. இதில் மயக்கடைந்த இளைஞரை மருத்துவனையில் அனுமதித்துள்ளனர் பொதுமக்கள்.
ஹோட்டல் தொழிலாளி
இந்த ஆபத்தான கனவு கண்ட நபர் நேபாளத்தைச் சேர்ந்த, 27 வயது இளைஞர். இவர் கிழக்கு டில்லி பகுதியில், ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார், இரண்டு நாட்களுக்கு முன், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது வித்யாசமான கனவு ஒன்றை கண்டார்.
வயிற்றில் 3 குழந்தைகள்
மூன்று குழந்தைகளை அவரது வயிற்றில் யாரோ, கம்ப்யூட்டர் மூலம், வலி தெரியாமல், வைத்து விட்டதாக , கனவு கண்டுள்ளார். பின்னர் அந்தக் குழந்தைகள் பசியால் துடித்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் தோன்றின. வயிறு பெருசா இருக்கே இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், திடுக்கிட்டு எழுந்தார் கனவு கலைந்த பின்னரும் அதை உண்மைதான் என்று நம்பி தனது வயிற்றினைத் தடவிப் பார்த்தார். அப்போது,
வயிறு சற்றுப் பெரிதாக இருந்து உள்ளது.
காப்பாத்தணுமே
தான் கனவு காணவில்லை உண்மைதான் என, நம்பிய அந்த நபர், வயிற்றில் இருந்த குழந்தைகளை வெளியே எடுத்து, அவற்றைக் காப்பாற்ற நினைத்தார். வயிற்றை கிழித்து... வயிறு நிறையத் தண்ணீர் குடித்தார். முன்கூட்டியே இலவச ஆம்புலன்சுக்கு போன் செய்து, வீட்டை விட்டு கீழிறங்கி, தெருவுக்கு வந்தார். கையில் இருந்த பிளேடால், வயிற்றைக் கிழித்து, உள்ளே இருந்த குடலை வெளியே எடுத்துப் போட்டு, குழந்தைகளைத் தேடினார்.
ஐயோ எவ்ளோ ரத்தம்
ரத்தம் வீணானதால், பதற்றமடைந்த அவர், குடலைப் பிடித்தபடி, தெருவோரத்தில் மயங்கி சாய்ந்தார். அந்த நேரம், ஆம்புலன்ஸ் வந்தது, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரைத் தூக்கிக் கொண்டு, டெல்லி, லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அதிர்ச்சியடைநத மருத்துவர்கள்
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபரிடம், டாக்டர்கள் விசாரித்த போது, தனக்கு வந்த கனவு பற்றி கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். போலீஸ் விசாரணையில், தான் மேற்கொண்ட செயல், தவறு தான் என, ஒப்புக்கொண்ட அந்த நபர், அதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
மனநல பாதிப்பா?
இளைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கவுரவ் சால்யா, அவரைப் பார்த்தார் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரியவில்லை; அவருக்கு ஏற்பட்ட கனவை உண்மை என நம்பியதால், இந்த விபரீதத்தில் ஈடுபட்டு உள்ளார். எனினும், அவர் நலமடைந்ததும், மனநல மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளோம்,'' எனக்கூறியுள்ளார். கனவு வந்து எப்படிப்பட்ட ஆபத்தை ஏற்படுத்திவிட்டது என்று இப்போது வருந்துகிறார் அந்த இளைஞர்.
No comments:
Post a Comment