பிரசிலியா: பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தை அடக்கும் முயற்சியில் போலீசாரால் கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 25 போலீசாருக்கு 624 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ளது சாவோ பவுலோஸ் என்ற ஜெயில். இங்கு 1992-ம் ஆண்டு கைதிகள் இடையே பயங்கர கலவரம் உண்டானது. கலவரத்தை அடக்க போலீசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 111 கைதிகள் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் 52 கைதிகள் போலீசாரின் குண்டடியில் பலியானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே, போலீசார் மிகவும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்ற வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 25 போலீஸ் அதிகாரிகளுக்கு தனித்தனியே 624 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தை திறந்தவுடன் வரும் டெலிவிசன் விளம்பரங்கள் "தேவைப்பட்டால் மட்டும்" பயன்படுத்துவது என்ற முறையில் இருந்தால் நல்லது.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ReplyDeleteசகோதரர் ஜாகிர் உசேன் அவர்களே தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தங்கள் கூறியது போன்று டெலிவிசன் விளம்பரத்தை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துவது போன்று செய்வதற்க்கு நான் பல முறை முயற்ச்சி செய்தேன் முடியவில்லை இருந்தாலும் நான் முயற்ச்சி செய்து வருகிறேன். தங்களின் மேலான கருத்துகளை தொடர்ந்து பதிந்து வரவும்