இறைவனின் திருப்பெயரால்...
ன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத்
தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று
சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில்
தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு
படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற
திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612
நிச்சயமாக
முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதான
உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யும் பொருட்டு அல்லாஹ்வை
அஞ்சுங்கள்;”
(அல்குர்
ஆன் 49:10)
உலகெங்கிலும்
வாழும் தாஜுல் இஸ்லாம் முஹல்லாவாசிகள், அதிரை அனைத்து முஹல்லாவாசிக்ள்,மற்றும்,(TIYA)வின் இணைய
தளவாசகர்கள் அனைவரும் அமீரகம் TIYAவின் ஈத் பெருநாள்
வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்து,கொள்கிறோம்.
நமதூர்
நண்பர்களுடனும், சொந்தங்களுடனும் இரண்டா கலந்து கொண்டாடப்படும் இந்த ஈதுல்
ஃபிதரு பெருநாளில்,நம் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும்,ஒற்றுமையும்நிறைந்ததாக
இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.
இப்படிக்கு
TIYA நிர்வாகிகள்
No comments:
Post a Comment