இன்று [ 04-08-2013 ] ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நமதூர் மேலத்தெரு ஜும்மாப் பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பாக பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவரும், மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத் தலைவருமாகிய M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் 'புனித ரமலான் மாதத்தின் சிறப்புகள்' குறித்து சிற்றுரை நிகழ்த்தினார். இறுதியில் கவிஞர் தாஹா அவர்களின் துஆவுடன் நோன்பு திறக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பின் பேரில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் மேலத்தெரு ஜும்மா பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பாக அதன் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், P.M.K. தாஜுதீன், மா. செ. ஜபருல்லாஹ், B. ஜமாலுதீன், N.M. சம்சுல் மன்சூர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நன்றி அதிரைநியூஸ்

No comments:
Post a Comment