சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம் கேட்டான்.
அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?” என்றார்.
இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.
யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார்.
நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம்
என்றான் அவன்
”5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக் கடனை
மாதத் தவனை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.
வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான் அவன். அவர் முகம் மாறியது. ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள் என்றான். அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து சேந்தார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார்.
உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப் பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்
”இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல் நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க! வந்தது அசதியா
இருக்கும்” என்றான். மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.
மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்
சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.
அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார். பக்கத்தில் வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்
அப்பாவா?” என்றான்.
ஆமாம் என்றார்.
”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டி சாப்பிடலாம்” என்றான்.
சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா? எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில
வீடுகளின் கதவு அடைத்திருக்கு?”
அது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல வராங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப் போவார்கள்!”
”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”
”அதுவா இவங்க இருக்கிற பிஸியில, பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா? அதனால ஒன்னு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க!”
இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், “ இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க
வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான் கூட்டிகிட்டு வர்றாரு!.
திகைத்துப் போனார் பெரியவர்.
தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.
”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே? இன்னக்கி வேலை இல்லையா?”
“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்.. எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு!”
”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”
”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு
போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம் முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”
”அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா?”
”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே
தூக்கம் தான். அன்று சாய்ந்திரம் எதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்”
”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்?”
”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்” அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்
அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும் அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.
அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.
அடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் என்றார் பெரியவர். ”என்ன அப்பா இவ்வளவு அவசரம்? என்று கேட்டவனுக்கு அவர் பதில்
உரைத்தார்:
”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான் படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!. இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும். கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன் காரனாகத்தான்
ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன். விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர
வேறு எதற்கும் கடன் வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில் நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு! மீண்டும்
திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.
அவருக்கு எப்படித் தெரியும் இந்த சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று!!!!!!!!!!!!
No comments:
Post a Comment