டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை ஓடி வந்து கட்டித் தழுவி அழும் தந்தையின் வீடியோ யூ டியூப்பில் பிரபலமாகியுள்ளது. சிரியாவில் கடந்த புதன்கிழமை நடந்த ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1,200 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த தாக்குதலில் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு இளம் தந்தை வாடினார். இந்நிலையில் அவரது மகன் உயிருடன் திரும்பி வந்ததைப் பார்த்து அவர் ஓடி வந்து அவனை கட்டித் தழுவிய வீடியோ சிரிய போராளிகளால் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை இந்த வீடியோவை 430,000 பேர் பார்த்துள்ளனர்.
ரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுமார் 600 பேர் கிழக்கு டமாஸ்கஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் பலியான ஒரு மாத பெண் குழந்தை உள்பட 20 குழந்தைகளின் உடலை அடையாளம் காண யாரும் வரவில்லை. ஏனென்றால் அவர்களின் குடும்பத்தாரும் தாக்குதலில் பலியாகிவிட்டனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு பின் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் சகோதரர் மஹர் அல் ஆசாத் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment