துபாய்: விமான நிலையத்தில் உள்ளாடையில் கொகைன் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தென்னாப்பிரிக்கப் பெண்ணிற்கு 5 ஆண்டுகள் தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம்.
கடந்த ஜனவரியில், பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக தென் ஆப்பிரிக்காவுக்கு கொகைன் கடத்த முயன்றதாக 24 வயது தென் ஆப்பிரிக்க பெண்ணை துபாய் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் உள்ளாடையில் மூன்றரை கிலோ போதைப் பொருள் கடத்தி வந்தது அம்பலமானது. இந்த கடத்தல் வழக்கில், துபாய் நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 லட்சம் திஹார் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. பிரேசில் நாட்டு போதை மருந்து மாஃபியாக்கள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாலேயே தான் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி அந்த பெண் துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணைக்கு வந்த அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஈசா அல் ஷரீப், அப்பெண்ணுக்கு 5 ஆண்டுகால தண்டனக் குறைப்பையும், அபராதத் தொகைக் குறைப்பையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
No comments:
Post a Comment