நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜோடி இதுவரை 106 முறை திருமணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டென்னிஸியைச் சேர்ந்தவர்கள் டேவிட் பிளேர், லாரன் பிளேர் தம்பதி. டேவிட் லாரனை கடந்த 1982ம் ஆண்டு ஹாலிவுட்டில் உள்ள யூனிவர்சல் ஸ்டுடியோஸில் முதன்முதலாக பார்த்தார். பின்னர் லாரனிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு அவர் முதலில் மறுத்துவிட்டார். பின்பு 3 மாதங்கள் கழித்து சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் கடந்த 1984ம் ஆண்டு முதன்முதலாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அந்த தம்பதி லண்டன், நியூயார்க், ஸ்காட்லாந்து, லாஸ் வேகாஸ், கிரேஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுவரை 106 முறை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் காதலர் தினம், புத்தாண்டு நள்ளிரவு, கிறிஸ்துமஸ் தினம், பிப்ரவரி 29ம் தேதி என்று பல்வேறு நாட்களில் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2001ம் ஆண்டு காதலர் தினத்தன்று அவர்கள் நியூயார்க்கில் உள்ள செரன்டிபிட்டி 3 ரெஸ்டாரன்ட்டில் திருமணம் செய்தபோது அதிக தடவை திருமணம் செய்து கொண்ட தம்பதி என்ற புதிய உலக சாதனை படைத்தனர். திருமணமாகி 30 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழும் அந்த தம்பதி வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மீண்டும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment