Latest News

நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களோடு ஒரு அழகிய சந்திப்பு [ காணொளி ]

அண்மையில் ஜெயலலிதா தலைமையில் அமைந்த அரசு, இரண்டாண்டுகளை நிறைவு செய்தது. அரசு மட்டுமல்ல, 2011-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காவது தமிழக சட்டமன்றமும் இரண்டாண்டுகளை நிறைவு செய்துள்ளது.


சட்டமன்ற உறுப்பினர்களின் கடந்த இரண்டாண்டு கால செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்பது பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி கருத்து கணிப்பு நடத்தியது. இதில் நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் முதல் 50 இடங்களில், 26 வது இடத்தைப் பிடித்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து மூன்று முறை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். எளிதாக தொடர்பு கொள்ளக்கூடியவர் மட்டுமல்ல எளிமையானவராகவும் காட்சியளிக்கும் நமது தொகுதி MLA அவர்களுக்கு 'அதிரை நியூஸ்' சார்பாக வாழ்த்துகளையும் - பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துக்கொண்டு அதிரை பொதுநலன் சார்ந்த கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டி நேரடியாக சந்தித்து வலியுறுத்தினோம்.

1. அரசு பொதுமருத்துவமனையின் கூடுதல் மருத்துவருடன் கூடிய 24 மணி நேர சேவை...

2. அரசின் சார்பாக அதிரையிலிருந்து மன்னார்குடிக்கு புதிய போக்குவரத்து துவக்குதல்...

3. அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலையை மறு சீரமைத்து தருதல்...

உள்ளிட்ட நமது கோரிக்கைகளை கவனமாக கேட்டுக்கொண்டு நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியளித்ததோடு மட்டுமல்லாமல் கூடுதலாக நமதூர் நலன் சார்ந்த மூன்று விசயங்களையும் அறிவிப்பு செய்து நமக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.

தனது தொகுதிக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிருப்பதும், அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதையும் அவரோடு நாம் பேசுகின்ற போது இவற்றை நன்கு அறிய முடிந்தது. விளம்பரத்தை விரும்பாத அடக்கமான மனிதர்.




இந்த நேர்காணலுக்கு உதவிய M.M.S. அப்துல் கரீம், அதிரை Y. மைதீன், நூர் முஹம்மது [ நூவண்ணா ], நியாஸ் அஹமது ஆகியரோடு அதிரை நியூசின் முதன்மை பங்களிப்பாளர் சாகுல் ஹமீத் ஆகியோருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி !

நன்றி: அதிரைநியூஸ்

1 comment:

  1. அன்பார்ந்த அதிரை மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரையிலிருந்து பட்டுக்குக்கோட்டை க்கு செல்லும் சாலை ஒரு ஒத்தை அடி பாதையை போல் குண்டும் குழியுமாக தான் இருக்கும் அன்றைய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹும் ஹாஜி எம். எம். எஸ் அபுல்ஹசன் அவர்ஹல் அன்றைய நெடுஞ்சாலை துறை செயலலாராஹா இருந்த எம்.எம்.எஸ் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஜனாப் அபுல்ஹசன் I . A .S அவர்ஹல் மூலமாஹா அதிரைய்லிருந்து பட்டுக்கோட்டை சாலையை விருவுபடுத்தி( இன்று உள்ளது போல்) 50 லட்ச ரூபாயில்
    அந்த ரோட்டையும் கனரா பேங்கிலிருந்து மகிழன்கொட்டை வரை உள்ள ரோட்டை அதே நேரத்தில்நெடுஞ்சாலையாக
    மாற்றி அந்த ரோட்டையும் 28 லட்ச ரூபாய் செலவில் போட்டு
    கொடுத்தார்கள் அதன் பிறகு அதை மர்ஹும் ஹாஜி எம். எம். எஸ் அப்துல் வஹாப் அவர்கள் சேர்மனாக இருந்த காலத்தில் எம்.எம்.எஸ் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் நெடுஞ்சாலை துறையில் பட்டுக்கோட்டையில் AD யஹா இருந்து பிறகு நெடுஞ்சாலை துறையின் தலைமை பதவிக்கு C E (CHIEF ENGINEER ) சென்ற திரு பாலாஜி அவர்ஹல் மூலமாஹா கனரா பேங்கிலிருந்து மகிழங்கோட்டை ரோட்டை புதுப்பித்து கொடுத்தார்கள் l.எம்.எம்.எஸ்.குடும்பத்திற்கு அரசியலையும் தாண்டி அரசு அலுவலர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்தததால் தான் அதிரைக்கு பல காரியங்களை சாதிக்க முடிந்தது.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED.2 June 2013 07:26
    அதுமட்டும் இல்லை, அன்று பெரும்பகுதி மக்களெல்லாம் குடி நீருக்காக மண் அப்பன் குளத்தை நம்பியே வாழ்ந்து வந்தனர், மேலும் குடிநீருக்காக நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்தது. தண்ணீர் குடங்களை தலையில் சுமந்த வண்ணம் இருந்தனர். தண்ணீருக்காக மக்கள் மிகவும் சிரமப் பட்டனர்.

    அந்த பிரச்சனையைப் போக்கி வீட்டுக்குள் குடிநீரை பைப் மூலமாக ஊற்றச் செய்ததே எங்கள் உயர்தகு முன்னாள் சேர்மன் மர்ஹூம் எம்.எம்.எஸ்.ஷேக்தாவூத் மரைக்காயர் அவர்களின் முயற்சி என்றால் அதுவே உண்மையும் கூட.

    இன்னும் இருக்கு,
    அன்று மிலாரி காட்டில் குடி நீருக்காக இயங்கும் மின் மோட்டார்களுக்கு அதிரைக்கு பட்டுக்கோட்டையிலிருந்து வீட்டு உபயோகத்திற்கு பெறப்பட்ட மின்சாரத்தின் மூலமாக மின் சப்ளை கொடுக்கப்பட்டது, இதனால் அடிக்கடி மின் தடைகளும் ஏற்பட்டு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    குடிநீருக்காக தடை இல்லா மின்சாரம் வேண்டும் என்று அன்று முக்கிய அதிகாரிகளை சந்தித்து மதுக்கூர் (வாடியக்காடு) துணை மின் நிலையத்திலிருந்து தனி ஸ்பெஷல் முறையில் உயர் அழுத்த 11KV மின்சாரத்தை கொண்டு வந்து மின் மாற்றி மூலமாக தாழ்வழுத்த மின்சாராமாக மாற்றி மிலாரி காடுகளில் உள்ள அத்தனை குடிநீர் மின் மோட்டார்களையும் தடை இல்லாமல் இயங்க வைத்தது யாருடைய முயற்ச்சி? எங்கள் உயர்தகு முன்னாள் சேர்மன் மர்ஹூம் எம்.எம்.எஸ்.ஷேக்தாவூத் மரைக்காயர் அவர்களின் முயற்சி என்றால் அதுவே உண்மையும் கூட.

    அன்று அந்த மதுக்கூர் (வாடியக்காடு) மின் தடம் தடம்தான் இன்று அதிரை துணை மின் நிலையத்துக்கு 33KVயை சுமந்து வரும் மின் தடமாக இருக்கின்றது.

    எம்.எம்.எஸ். சகோதரர்களின் சாதனைகள் இன்னும் இருக்கு, விரைவில் எதிர்பாருங்கள், அது ஒரு கட்டுரையாக வெளிவரும்.
    ஜமால் காக்கா மிஹவும் சரியாக சொன்னிர்கள் அது எம் எம் எஸ் குடும்பத்துடன் நெருங்கி பலஹியவர்ஹளுக்குதான் உண்மை நிலவரம் நன்றாக தெரியும். முன்னால் சேர்மன் மர்ஹும் எம் எம் எஸ் சேக்தாவுது மரைக்காயர் அவர்கள் அதிரை மக்கள் தண்ணீருக்கு படும் கஷ்டத்தை உணர்ந்து அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்களை சந்திப்பதற்கு அவரது செயலாளர் எம்.எம்.எஸ்.குடும்ப நண்பர் திரு பத்மமநாபன் மூலமாக appointment பெற்றிருந்த சமயம் எம்.எம்.எஸ் சேக்தாவுது மரைக்கார் மிகவும் உடல்நலம் குன்றி நடக்க முடியாமல் வீட்டிலயே ஓய்வில் இருந்த நேரம் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிலைமையில் சென்னைக்கு போகத்தான் ஆகவேண்டுமா என்று தடுத்தும் நான் இந்த நிலைமையில் நேரடியாக போய் முதல்வரை சந்தித்தால் தான் என்னை நேரடியாக பார்த்தால்தான் முதல்வர் அவர்கள் மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு ஆவணை செய்வார் என்று உறுதியுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்கள். அவர்கள் தலைமை செயலகத்துக்கு சென்ற சமயம் தலமைசெயலகதின் லிப்ட் வேலை செய்யவில்லை முதல்வரின் அறை ரெண்டாவது மாடியில் உடனே தனது டிரைவர் சிங்காரம் அவர்களிடம் சொல்லி ஒரு சேர் கொண்டுவர செய்து அதில் உட்கார வைத்து இரு காவலர்கள் மாடிப்படி வழியாக தூக்கிகொண்டு தான் முதல்வர் அறைக்கு சென்றார்கள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் ஏன் இந்த நிலைமையில் இவளவு சிரமப்பட்டு வந்தீர்கள் என்று கடிந்து கொண்டவராக உடனே அந்த நிமிடமே அதிராம்பட்டினம் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு sanction செய்து கையிலெதிட்டு உடனே அவர்கள் கையிலேயே அந்த காப்பியை கொடுதனிப்பினார் தமிழக மக்கள் திலகம் அதிரை மக்கள் திலகத்திடம் .

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.