Latest News

முஸஃபாவில் மீண்டும் துளிர்விட்ட தமிழ் தஃவா

அபுதாபி, முஸஃபா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் வரை முற்றிலும் தொழிலாளர் முகாம்கள் நிறைந்த ஒரு பகுதியாக திகழ்ந்தது என்பதும் அப்படிப்பட்ட முகாம்களில் தமிழ் தஃவாக்களும் குறையின்றி நடந்து வந்ததும் தொடர்புடையோர் அறிந்ததே. கால ஓட்டத்தில் லேபர் கேம்ப்புகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட, நடைபெற்று வந்த பலமுனை தமிழ் தஃவாவும் சுவடின்றி போயின. 



இன்றைய முஸஃபா பகுதி புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், வாகன நெரிசல் என புதிய பரிமாணத்திற்கு மாறி இருந்தாலும் ஓரு சில ஆண்டுகள் முன்பு வரை முஸஃபா எங்கும் கோலோச்சிய தமிழ் தஃவா பணிகள் நடைபெறவில்லையே என்ற ஏக்கம் பலரின் மனதிலும் ஒரு விடைதேடா கேள்வியாக நிலைபெற்றிருந்தது. 



இந்த ஏக்கத்தை முடிந்தளவு தீர்க்கவும், அபுதாபிக்கு மிகக்குறுகியகால வருகை புரிந்துள்ள ஏகத்துவ அழைப்பாளர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களை பிரயோஜனமான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் நாடியதன் விளைவு, அல்லாஹ்வின் மிகப் பெருங்கிருபையால் சென்ற இரவு 9.30 மணிமுதல் 10.30 மணிவரை (31.05.2013 வெள்ளிக்கிழமை) முஸஃபா 12 - ஷாபியா கலிஃபா பகுதியில் 'மறுமைக்கு ஏற்ற மனிதனின் வாழ்வு' என்ற பொருளில் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் பயனுள்ளதோர் மார்க்க வகுப்பை குர்ஆன், ஹதீஸை ஒளியில் நடத்தினார்கள். 



முறையான முன்னறிவிப்புகள் ஏதுமின்றி முஸஃபா வாழ் அதிரை சகோதரர்களால் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வேறில் வெந்நீர் விடப்பட்டதாக கருதப்பட்ட அபுதாபி, முஸஃபா தமிழ் தஃவா களம் மீண்டும் துளிர்விட துவங்கியதன் மகிழ்ச்சியை வருகை தந்திருந்த சகோதரர்களின் முகங்களில் காண முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்வே புகழனைத்தின் சொந்தக்காரன். இன்ஷா அல்லாஹ் தமிழ் தஃவா தொய்வின்றி மீண்டும் அபுதாபி, முஸஃபா பகுதியில் தொடர்ந்திட ஏகனை வேண்டுவீராக! 

அபூ அஸ்அத்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.