சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் குறுகியகால அமீரக வருகையொட்டி தினந்தோறும் தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை அறிவீர்கள். அதன் தொடரில் அபுதாபியில் பெண்களுக்காக மட்டும் காலை வேளையில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தர்பியா இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்தது. இன்று சகோதரர் ஜெய்லானி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழமைபோல் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முஸஃபாவிலிருந்து அல் அய்ன் நகருக்குச் செல்லும் வழியில் டிரக் ரோட்டில் அமைந்துள்ள பனியாஸ் சைனா கேம்ப் பள்ளியில் இஷாவுக்குப்பின் நடைபெற்ற சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவில் நூற்றுக்காணக்கான சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்"மறுமைக்கேற்ற சிறந்த அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சகோதரர் நாகூர் அபுதாஹிர் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் ஒரு இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கின்ற நிலையிலும், இயக்கப் பிரச்சாரங்களோ, துதிபாடல்களோ, வசைமொழிகளோ இன்றி எடுத்துக் கொண்ட தலைப்பினுள் மட்டும் நின்று குர்ஆனையும் ஹதீஸையும்; மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அழகிய அணுகுமுறை அனைத்து தரப்பு நெஞ்சங்களையும் கவர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளார்கள் அனைவரும் தஃவா என்ற ஒத்தக்கருத்தில் நூற்கோர்த்தார்போல் இணங்கி இயங்கியதும், இணைந்து செயலாற்ற தஃவா களம் என்றும் திறந்திருக்கும் வாசலே என சொல்லாமற் சொல்லிற்று.
அதிரை அமீன்
No comments:
Post a Comment