அதிரை தாருத் தவ்ஹீத்தின் [ ADT ] அங்கமாகிய அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் இன்று [ 07-06-2013 ] மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு இரயில நிலையம் அருகே அமைந்துள்ள கல்லூரியின் வளாகத்தில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பேராசிரியை சயீதா பானு அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும் பட்டம் பெற்ற ஆலிமாக்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.
விழா நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.
மேலும் சிறந்த மாணவிகளுக்கும் பெற்றோர்கள் சந்திப்பில் தவறாது கலந்துகொண்டோருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள் பெரும்திரளாக இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment