இன்று [ 20-06-2013 ] அதிகாலை 3.50 மணியளவில் அதிரை பேரூராட்சி அருகே உள்ள ஜாஸ் பேக்கரி கடை அருகே வாகன விபத்து ஏற்பட்டது.
அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே சேது பெருவழிச் சாலையில் அமைந்துள்து ஜாஸ் பேக்கரி கடை. இந்த கடையின் சாலையோரத்தில் இடது பக்கமாக நின்று கொண்டு இருந்த வாகனத்தில் தூத்துக்குடியிலிருந்து எதிரே வந்த வாகனம் மோதியதில் இருவர் காயமடைந்தனர் மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதிகாலை ஏற்பட்ட விபத்தினால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்பாகக் காணப்பட்டது.
எதிரே வந்த வாகனத்தின் ஓட்டுனர் அயர்ந்து தூங்கியதால் ஏற்பட்ட விபத்தே இது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment